Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2022 செப்டெம்பர் 10 , மு.ப. 08:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமது தாயாரான மறைந்த மகாராணி எலிசபெத் ஏழு தசாப்தங்களுக்கும் மேலாக 'விசுவாசம், மரியாதை மற்றும் அன்புடன்' சேவை செய்ததாக பிரித்தானிய மன்னர் சார்ல்ஸ் தெரிவித்துள்ளார்.
இரண்டாவது எலிசபெத் காலமானதை அடுத்து மன்னராக நியமிக்கப்பட்ட சார்ல்ஸ், முதன்முறையாக நாட்டு மக்களுக்கு உரையாற்றியபோதே இதனை குறிப்பிட்டுள்ளார்.
' என் அன்புக்குரிய தாய் - எனக்கும் எனது குடும்பத்தினர் அனைவருக்கும் ஒரு உத்வேகமாகவும் முன்மாதிரியாகவும் இருந்தார். மேலும் எந்தவொரு குடும்பமும் தங்கள் தாய்க்கு செலுத்த வேண்டிய இதயப்பூர்வமான கடனை நாங்கள் அவருக்குக் கடமைப்பட்டுள்ளோம்' என்று சார்ல்ஸ் தெரிவித்துள்ளார்.
'மகாராணி அசைக்க முடியாத பக்தியுடன் செயற்பட்டமையை போன்று நானும் இப்போது கடவுள் எனக்குக் கொடுக்கும் எஞ்சிய காலம் முழுவதும் நமது தேசத்தின் அரசியலமைப்புக் கொள்கைகளை நிலைநிறுத்த உறுதியளிக்கிறேன் என்று சார்ல்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
'என் வாழ்நாள் முழுவதும் நான் உங்களுக்கு விசுவாசம் மரியாதை மற்றும் அன்புடன் சேவை செய்ய முயற்சிப்பேன்.' என்றும் அவர் தமது உரையில் தெரிவித்துள்ளார். (a)
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago