2025 மே 16, வெள்ளிக்கிழமை

பிரித்தானியாவிடம் இருந்து மீட்கத் திட்டம்

Ilango Bharathy   / 2023 மே 14 , பி.ப. 03:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

கோஹினூர் வைரம் மற்றும் பழங்கால கோயில் சிலைகளை பிரித்தானியாவிலிருந்து மீட்க இந்தியா திட்டமிட்டுள்ளதாகத்  தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து பிரித்தானியாவைச் சேர்ந்த பிரபல ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தியில்” சுதந்திரத்திற்கு முந்தைய காலனியாதிக்க ஆங்கிலேயர் ஆட்சியில் பறிபோன கலைப் பொருட்களை இந்தியா திருப்பி அனுப்புமாறு கேட்கத் திட்டமிட்டிருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

 இது பிரதமர் மோடியின் முன்னுரிமைத் திட்டங்களில் ஒன்றாக இருக்கும் என்றும், இரு நாடுகளுக்கு இடையே ராஜதந்திர மற்றும் வர்த்தக பேச்சுவார்த்தைகளின் போது இது குறித்து பேசப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இதற்காக பிரித்தானியா முழுவதும் உள்ள சிறிய அருங்காட்சியங்கள், தனியார் கலைப்பொருள் சேகரிப்பாளர்கள் ஆகியோர் தாமாக முன்வந்து இந்திய கலைப்பொருட்களை ஒப்படைக்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .