2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பிரித்தானியாவின் பிரதமர் பதவியை இழக்கும் போரிஸ்?

Ilango Bharathy   / 2022 ஜனவரி 18 , பி.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

விருந்தொன்றில்  கலந்து கொண்ட காரணத்திற்காக பிரித்தானியாவின் பிரதமர் போரிஸ் ஜோன்சன் (Boris Johnson ) தனது  பிரதமர் பதவியை இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவால் மிக அதிகமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் பிரித்தானியாவும் ஒன்று. குறிப்பாக கடந்த வருடம் அந்நாட்டில் கொரோனாத் தொற்றுப் பரவலானது தீவிரமடைந்து காணப்பட்டது.

இக்காலகட்டத்தில் பிரதமர் போரிஸ்  விருந்துபசார நிகழ்வொன்றில் கலந்துகொண்டதாக  அவரது முன்னாள் ஆலோசகர் வெளியிட தகவலானது அந்நாட்டில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியிருந்து.

இதனையடுத்து நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் பேசப்பட்டபோது, '' மக்களுக்கு போரிஸ் ஜோன்சன் துரோகம் செய்துவிட்டார். விருந்தில் கலந்த சம்பவத்தை பல மாதங்களாக மக்களுக்கு தெரியப்படுத்தாமல் மறைத்துள்ளார். அவர் இராஜினாமா செய்ய வேண்டும்'' என்று நாடாளுமன்ற உறுப்பின்கள் வலியுறுத்தியுள்ளனர்.

எனினும் குறித்த விருந்துபசார நிகழ்ச்சியை

இதனையடுத்து தன் மீதான குற்றச்சாட்டுக்கு போரிஸ் விளக்கம் அளித்துள்ள போதும் அவரது விளக்கம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

 

இந்நிலையில் பிரித்தானியாவின் அடுத்த பிரதமராக வரும் வாய்ப்பு  இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனாக்கிற்கு கிடைக்கும் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

41 வயதாகும் ரிஷி சுனாக், பிரிட்டனின் நிதியமைச்சராக பொறுப்பில் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .