Editorial / 2019 ஜனவரி 07 , மு.ப. 03:25 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐக்கிய இராச்சியம் (பிரெக்சிற்) விலகுவது தொடர்பான உடன்படிக்கையை, நாடாளுமன்றத்தின் அங்கிகாரத்துக்காகச் சமர்ப்பிப்பது மேலும் தாமதாகுமெனக் கருதப்படுகிறது. ஐ.இராச்சியத்தின் “சண்டே டெலிகிராப்” நேற்று வெளியிட்ட செய்தியின் அடிப்படையில், பிரதமர் தெரேசா மே, இதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார் எனக் கருதப்படுகிறது.
பிரெக்சிற் தொடர்பாக, பிரதமரின் திட்டத்துக்கு அமைச்சரவை அங்கிகாரம் கிடைத்தாலும், நாடாளுமன்ற அங்கிகாரம் கிடைப்பது சந்தேகமாகவே உள்ளது. இதனால், கடந்தாண்டு டிசெம்பரில் நடைபெறவிருந்த வாக்கெடுப்பை, இம்மாத நடுப்பகுதி வரை, பிரதமர் தாமதித்திருந்தார்.
ஆனால், உடன்படிக்கைக்குத் தேவையான ஆதரவு இன்னமும் கிட்டாத நிலையில், நாடாளுமன்றத்தில் அதைச் சமர்ப்பிப்பது குறித்து, பிரதமர் மே தயங்கி வருகிறாரெனக் கருதப்படுகிறது. ஆனால், எவ்வளவு காலத்துக்கு அவர் அதை ஒத்திவைப்பாரென்பது தெரியவரவில்லை. ஏனெனில், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து, மார்ச் 29ஆம் திகதி, ஐ.இராச்சியம் விலகிவிடும். அதற்கு முன்னதாக, இது தொடர்பான உடன்படிக்கை ஏற்படுத்தப்பட வேண்டும்.
அவ்வாறான உடன்படிக்கை ஏற்படுத்தப்படாவிட்டால், எவ்வித ஒப்பந்தங்களுமின்றி, ஐ.இராச்சியம் விலக வேண்டிய நிலை ஏற்படும். இது, இரு தரப்புகளுக்கும் கடுமையான பாதிப்புகளாக அமையுமெனக் கருதப்படுகிறது.
11 minute ago
18 minute ago
2 hours ago
05 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
18 minute ago
2 hours ago
05 Nov 2025