Freelancer / 2025 ஒக்டோபர் 01 , மு.ப. 07:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
மத்திய பிலிப்பைன்ஸில் 6.9 மெக்னிடியூட் அளவில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தில் சிக்கி 26 பேர் உயிரிழந்துள்ளனர் என அந்த நாட்டின் அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், சுமார் 200 பேர் வரை காயமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று உள்ளூர் நேரப்படி இரவு 10 மணியளவில் செபு நகரின் கடலோரப் பகுதியில் இந்த நிலநடுக்கம் தாக்கியது.
நிலநடுக்கத்தால் மின்சாரம் துண்டிக்கப்பட்டதுடன் கட்டடங்களும் சேதமடைந்தன.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடுவதற்காக அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. (a)

8 hours ago
9 hours ago
9 hours ago
25 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago
9 hours ago
25 Mar 2026