2026 மே 13, புதன்கிழமை

பீஜிங்கின் அணு ஆயுதங்கள் பற்றிய தெளிவின்மை

Freelancer   / 2022 ஜனவரி 31 , பி.ப. 07:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

அணு ஆயுதங்கள் பற்றிய பீஜிங்கின் தெளிவின்மையானது, நவீனமயமாக்கல் மற்றும் விரிவாக்கம் பற்றிய முரண்பாடான கூற்றுகளுக்கு இடையில் ஊசலாடுகிறது என்று ஹொங்கொங் போஸ்ட் தெரிவிக்கிறது.

2021 நவம்பரின் ஆரம்பத்தில், சீனா தனது அணு ஆயுதங்களை வேகமாக விரிவுபடுத்துகிறது என்று பென்டகனின் அறிக்கையில் கூறப்பட்டது. 

ஆறு ஆண்டுகளுக்குள் தோராயமாக 700 போர் முனையங்களையும் 2030 ஆம் ஆண்டுக்குள் 1,000 போர் முனையங்களை சீனா நிறுவலாம் என அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

சீனா தனது அணு ஆயுதங்களை கணிசமான அளவில் விரிவுபடுத்தும் பாதையில் உள்ளது என்பதை பென்டகனின் அறிக்கை தெளிவாக சுட்டிக்காட்டுகிறது.

அடுத்த தசாப்தத்தில்  சீனா தனது அணுசக்தி விநியோக தளங்களை நிலம், கடல் அல்லது ஆகாய அடிப்படையில் விரிவுபடுத்தும் என்றும் அதற்கான உட்கட்டமைப்பு அபிவிருத்தி ஏற்கெனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பென்டகன் அறிக்கை கூறுகிறது.

மறுபுறம், அணு ஆயுதக் களஞ்சியத்தை தாம் விரைவாக விரிவுபடுத்துவதாக வெளியான கருத்தை பீஜிங் முற்றாக நிராகரித்துள்ளது.

பென்டகனால் செய்யப்பட்ட கணிப்புகள் நாட்டின் வடமேற்குப் பகுதியில் புதிய நிர்மானங்களை (ஏவுகணைக் குழிகள்) காட்டும் செயற்கைக்கோள் படங்களின் அடிப்படையில் அமைந்தன. 

இந்த நேரத்தில் சீனாவின் ஆயுதக் களஞ்சியத்தின் அளவைக் கண்டறிய செயற்கைக்கோள் புகைப்படங்களைப் பயன்படுத்த முடியாது என்று சீன வெளியுறவு அமைச்சின் ஆயுதக் கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் நாயகம் ஃபூ காங் மட்டுமே கருத்து வெளியிட்டுள்ளார் என்று ஹொங்கொங் போஸ்ட் தெரிவித்துள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .