Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Mithuna / 2023 நவம்பர் 29 , பி.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
நியூசிலாந்தில் கடந்த மாதம் பொதுத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆளுங்கட்சியான தொழிலாளர் கட்சியை விட, கிறிஸ்டோபர் லக்சன் தலைமையிலான தேசிய கட்சி அதிக இடங்களை பெற்றது. அதன்பின்னர் 2 சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேசிய கட்சி ஆட்சியை கைப்பற்றியது.
கூட்டணி கட்சிகளுடனான கூட்டணி ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்ட நிலையில், பதவியேற்பு விழாவில் கூட்டணியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட கிறிஸ்டோபர் லக்சன் (வயது 53), நாட்டின் பிரதமராக பதவியேற்றார்.
பின்னர் பேசிய பிரதமர் லக்சன், நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு முதல் முன்னுரிமை கொடுக்க உள்ளதாக கூறினார்.
மேலும், முந்தைய அரசாங்கம் விதித்த புகையிலை கட்டுப்பாடுகளை, குறிப்பாக சிகரெட்டில் குறைந்த அளவிலான நிகோடின், சில்லறை விற்பனை குறைப்பு மற்றும் இளைஞர்கள் புகைப்பிடிக்க வாழ்நாள் தடை உள்ளிட்ட கட்டுப்பாடுகளை ரத்து செய்ய புதிய அரசு திட்டமிட்டுள்ளது. என தெரிவித்தார்.
இதுதொடர்பாக புகைப்பிடித்தல் எதிர்ப்பு அமைப்பான ஹெல்த் கோலிஷன் அடோடேரோவா வெளியிட்டுள்ள அறிக்கையில், "அரசு கொள்கை முடிவில் இருந்து பின்வாங்குவது நாட்டிற்கே அவமானம். இது பொது சுகாதாரத்தில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். புகையிலை தொழிலுக்கு ஒரு பெரிய வெற்றியாக அமையும். மக்களின் உயிரிழப்புகளால் அந்த தொழிலின் லாபம் அதிகரிக்கும்" என கூறியுள்ளது.
21 minute ago
27 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
27 minute ago