2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

புடினுடன் கை கோர்த்த ஜின்பிங் –உலக நாடுகள் அதிர்ச்சி

Ilango Bharathy   / 2023 மார்ச் 20 , பி.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நேட்டோ படையுடன் உக்ரேன் இணைவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து,  ரஷ்யா கடந்த  ஒரு வருடங்களாக உக்ரேன் மீது தாக்குதல் நடத்தி வருகின்றது.

இதன்காரணமாக அமெரிக்கா,பிரித்தானியா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளும்  ரஷ்யாவின் தாக்குதலை எதிர்கொண்டு பதில் தாக்குதல் நடத்துவதற்கு உக்ரேனுக்கு  பல மில்லியன் மதிப்புள்ள இராணுவ உதவிகளை வழங்கி வருகின்றன.

 அதே சமயம் சீன அரசு ரஷ்யாவுக்கு தனது ஆதரவைத் தெரிவித்து வருகின்றது.

இந்நிலையில் சீன ஜனாதிபதி சி  ஜின்பிங் அரசுமுறைப்  பயணமாக இன்றைய தினம்(20)   ரஷ்யாவுக்குச் சென்றுள்ளமை உலக நாடுகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்தவகையில் ரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோவை வந்தடைந்த சீன ஜனாதிபதி சி  ஜின்பிங், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை சந்தித்ததாகவும் இதன்போது உக்ரேன்- ரஷ்யாவுக்கு இடையிலான போர் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து இருவரும்  கலந்துரையாடியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X