2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

பூச்சிகளை உட்கொள்ள மக்களுக்கு அரசு அனுமதி?

Ilango Bharathy   / 2022 ஒக்டோபர் 18 , பி.ப. 02:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனா, தாய்லாந்து, ஜப்பான்  போன்ற ஒரு சில நாடுகளில் பூச்சிகளை மனிதர்கள் உணவாக உட்கொண்டு வருகிறார்கள்.

 அந்த வகையில் சிங்கப்பூரில் பூச்சிகளை மனிதர்கள் உணவாக உட்கொள்ளவும், கால்நடை தீவனமாக கொடுப்பதற்கும் அனுமதிப்பது தொடர்பாக உணவு மற்றும் கால்நடை தீவனத் தொழில்துறையிடம் சிங்கப்பூர் அரசு கருத்து கோரியது.

இதற்கு அனுமதி கிடைத்தால் மனிதர்கள் வண்டுகள், பூச்சிகள், தேனீக்கள், அந்து பூச்சிகள் போன்றவற்றை உணவாக உட்கொள்ள முடியும்.

இதுகுறித்து உணவுத்துறை செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், ”முழுமையான அறிவியல் பூர்வ ஆய்வு மேற்கொண்ட பிறகு சில குறிப்பிட்ட பூச்சி இனங்களை உணவாக உட்கொள்ள அனுமதிக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

 மேலும் அண்மைக்காலமாக மனிதர்கள் உணவாக உட்கொள்ளவும், கால்நடை தீவனத்துக்காகவும் வணிக ரீதியாக பூச்சி பண்ணைகளை ஏற்படுத்துவதை ஐ.நாவின் உணவு மற்றும் வேளாண்மை ஊக்குவித்து வருகின்றது எனவும்  தெரிவித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X