Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
Ilango Bharathy / 2023 ஏப்ரல் 17 , பி.ப. 03:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
விண்வெளியில், மனிதர்களுக்கான உணவுப்பொருட்களை நிலவில் இருந்து கொண்டு வரப்படும் மண்ணைக் கொண்டு விளைவிக்க முடியுமா என்ற முயற்சியை நாசா கடந்த வருடமே முன்னெடுத்திருந்தது.
எதிர் காலத்தில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கோ, நிலவிற்கோ அல்லது செவ்வாய் கிரகத்திற்கோ ஆய்விற்காக செல்லும் விண்வெளி வீரர்களுக்கு புதிய காய்கறிகள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே இம்முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக நிலவில் இருந்து மண் கொண்டுவரப்பட்டு பதப்படுத்தப்பட்டு அந்த மண்ணில் தக்காளி விதை விதைக்கப்பட்டது. பூமியில் இருந்து கொண்டு செல்லப்பட்ட தக்காளி விதையும் விண்வெளியின் சீதொஷ்ண நிலைக்கு ஏற்ப பதப்படுத்தப்பட்டிருந்தது.
அந்த தக்காளி விதைக்கப்பட்டு முளைத்த செடியில் சரியாக 104 நாட்கள் கழித்து தக்காளி விளைந்திருக்கிறது. அந்த தக்காளி பறிக்கப்பட்டு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் சிறப்பு விண்கலம் மூலம் நேற்றுமுன்தினம் பூமிக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இருக்கும் நாசாவிற்கு சொந்தமான ஸ்பேஸ் சென்டரலில் அந்த தக்காளி வைக்கப்பட்டு பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தப்படவுள்ளது.
இது, ஒரு முன்னோட்ட முயற்சி என்றும், இதில் வெற்றி பெற்றால் பெரிய அளவில் தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் மற்றும் பழங்களை விண்வெளியில் விளைவிக்க முடியும் என்றும் நாசா நம்பிக்கை தெரிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
37 minute ago
1 hours ago
1 hours ago