2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பூமியிலிருந்து செவ்வாய்க்கு 45 நாட்களில் பயணம்

Ilango Bharathy   / 2022 பெப்ரவரி 20 , பி.ப. 05:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பூமியிலிருந்து செவ்வாய்க்கு 45 நாட்களில் செல்லக்கூடிய வகையில்  புதிய தொழில்நுட்பமொன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.  

ஆச்சரியமாக இருந்தாலும் இது சாத்தியமாகும் உண்மை, என்றும் அவர்கள் உறுதியளிக்கின்றனர் .

லேசர்-வெப்ப உந்துவிசை" தொழில்நுட்பத்தின் மூலம்  இதனை சாத்தியமாக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

 தற்போதைய நிலவரப்படி ஒருவர் செவ்வாய் கிரகத்தை அடைய சுமார் 500 நாட்கள் ஆகும் என்று நாசா கணித்துள்ள நிலையில் ஆறு வாரங்களில் செவ்வாய் கிரகத்தை அடைவது என்பது, அணுசக்தியால் இயங்கும் ரொக்கெட்டுகளால் மட்டுமே  முடியும் என்று முன்பு கருதப்பட்டது.

எனினும்  தற்போதைய தொழில்நுட்பம் செவ்வாய்க்கான பயண நேரத்தை குறைப்பதில் வெற்றி பெற்றுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .