2024 மார்ச் 28, வியாழக்கிழமை

பூமியில் கிடைத்த ஏலியன் கைகளால் பரபரப்பு

Ilango Bharathy   / 2022 நவம்பர் 28 , மு.ப. 10:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பிரேஸிலைச் சேர்ந்த லெடிசியா கோம்ஸ் சன்டியாகோ என்ற பெண்ணும், அவரது காதலரான டெவனைர் சாவ்சா என்பவரும் அண்மையில் இல்ஹா காம்ப்ரிடா கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் கிடந்த மிகவும் நீளமான கையொன்றைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதனையடுத்து குறித்த கையை வீடியோ எடுத்து இணையத்தில் பதிவேற்றிய நிலையில் குறித்த வீடியோவானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்து.

குறித்த வீடியோவில் ”இதனை  இல்ஹா காம்ப்ரிடா கடற்கரையில் கண்டெடுத்ததாகவும் இது பார்ப்பதற்கு ஏலியனின் கைகள் போன்ற இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் இக் கை நம் உலகத்தைச் சார்ந்த உயிரினத்துடையது தானா? அல்லது ஆழ்கடலில் வாழும் அரியவகை உயிரினத்துடையதா? என்பது குறித்த விளக்கம் யாருக்காவது தெரிந்திருந்தால்  தயவுசெய்து தெரிவிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் எரிக் கோமின் (Eric Comin) என்ற கடல்வாழ் உயிரியல் ஆய்வாளர், இது டால்பினின் எலும்பு என்றும், இது இறந்து 18 மாதங்கள் இருக்கும் என்றும் உறுதியாகக் கூறியுள்ளார்.

மேலும் இது போன்ற விலங்குகளின் எச்சங்களைப் பார்க்கும் போது அந்த நாட்டின் ஆய்வு மையமான Cananéia Research Institute (IPEC)-க்கு தகவல் கொடுக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X