2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

பெண்கள் ` பூங்கா மற்றும் ஜிம்மிற்குச்` செல்லத் தடை

Ilango Bharathy   / 2022 நவம்பர் 17 , மு.ப. 09:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆப்கானிஸ்தானில் கடந்த வருடம் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியதிலிருந்து அங்கு பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர் .

குறிப்பாக பெண்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கும் விதமாக பல்வேறு கட்டுப்பாடுகளை  தலிபான் அரசு விதித்து வருகின்றது.

அதிலும் குறிப்பாக பெண்கள் ஆண்களின் துணையின்றி வெளியே செல்வதற்கும், உயர் கல்வி கற்பதற்கும், விளம்பரங்களில் நடிப்பதற்கும், தொலைக்காட்சிகளில் தோன்றுவதற்கும் தலிப்பான்கள் தடை விதித்திருந்தமை சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்து.

 இந்நிலையில்  ‘பெண்கள் ஜிம் மற்றும்  பூங்காவுக்குச் செல்ல தலிபான் அரசு தடை விதித்துள்ளதோடு, தடையை மீறுபவர்களுக்குக்   கடுமையான தண்டனை வழங்கப்படுமெனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து  மத விவகாரங்களுக்கான துறையின் செய்தி தொடர்பாளர் மொகமது அகே மொஹஜர் கருத்துத் தெரிவிக்கையில் ” நாங்கள் ஆட்சிப்பொறுப்பேற்றதில் இருந்து கண்ணியத்தோடு பெண்களின் உரிமையை காக்க எவ்வளவோ முயற்சிகள் எடுத்தோம்.

இங்கு ஆண்களுக்கும் பெண்களுக்கும் பாலின வித்தியாசமே இல்லாமல் போயுள்ளது. பெண்கள் ஹிஜாப் அணிவது, பொது இடங்களில் தலைப்பாகை அணிவது உள்ளிட்ட நடைமுறைகளை பின்பற்றத் தவறுகின்றனர்.

பூங்காக்கள் மற்றும் ஜிம்மஜில் பெண்கள் மட்டும் பயன்படுத்துவதற்கு தனி நாட்களை ஒதுக்கச் சொல்லி வலியுறுத்தினோம். ஆனால் யாரும் அதை நடைமுறைப்படுத்தவில்லை. இதன் காரணமாகவே இது போன்ற கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டிய கட்டாயம் எங்களுக்கு ஏற்பட்டுள்ளது”என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X