Freelancer / 2024 ஓகஸ்ட் 19 , பி.ப. 04:59 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஜெர்மனியின் கிழக்கு மாகாணமான சாக்சோனியில் உள்ள லீப்ஜிக் நகரின் புறநகரில் சனிக்கிழமை ஏற்பட்ட திடீர் அசம்பாவிதத்தில் 30 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இங்கு நடைபெற்ற இசை விழாவில் பெர்ரிஸ் சக்கரம் (Ferris Wheel) திடீரென தீப்பிடித்ததால் இந்த அசம்பாவிதம் ஏற்பட்டது.
உள்ளூர் நேரப்படி இரவு 9 மணியளவில் பெர்ரிஸ் சக்கரம் தீப்பிடித்தது. முதலில் பயணிகள் காரில் இருந்த தீ அக்கம் பக்கத்தினருக்கும் பரவியதை அடுத்து மீட்புப் பணியில் உலங்கு வானூர்தி பயன்படுத்தப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த திடீர் தீ விபத்தில் 30 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும், ஆனால் இந்த காயங்கள் பெரும்பாலும் ஒப்பீட்டளவில் புகையை சுவாசித்ததால் ஏற்பட்டதாக அறிகுறிகள் தெரிவிக்கின்றன என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
எனினும் இரண்டு பேர் படுகாயமடைந்துள்ளதாக ஜெர்மனி செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளதுடன், காயமடைந்தவர்களில் நான்கு அதிகாரிகளும் அடங்குவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.S
9 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
1 hours ago
1 hours ago