Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Freelancer / 2024 ஒக்டோபர் 17 , மு.ப. 06:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
நைஜீரியாவின் ஜிகாவா பகுதியில் பெற்றோல் ஏற்றிச்சென்ற பௌசர் விபத்துக்குள்ளானதில், 140 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
புதன்கிழமை (16), நெடுஞ்சாலையில் செல்லும்போது, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து பௌசர் திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தால் பௌசரில் இருந்த பெற்றோல் கசிந்து வெளியேறியது. அங்கிருந்த மக்கள் கசிந்த பெற்றோலை சேகரிக்க விரைந்தனர்.
அதிக எண்ணிக்கையில் மக்கள் கூடிய நிலையில், பௌசர் தீப்பிடித்து எரிந்தது. இதில் 140 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், 50க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளர் என, வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நைஜீரியாவில் சரக்கு ரயில் போக்குவரத்து மிகப்பெரிய தோல்வி அடைந்ததால், வீதி மார்க்கமாக பௌசர்களில் எரிபொருள்கள் எடுத்துச்செல்லப்படுகின்றன. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. (AN)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago