2026 மே 14, வியாழக்கிழமை

பெலாரஸ் - ரஷ்யா கூட்டு சேர்ந்து உக்ரைனை தாக்குகின்றதா?

Freelancer   / 2022 பெப்ரவரி 24 , பி.ப. 02:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பில் பெலாரஸ் இராணுவம் பங்கேற்கவில்லை என்று அந்நாட்டு ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோ கூறினார்.

பெலாரஸ் நாட்டின் பெல்டா மாநில செய்தி நிறுவனம் இதை தெரிவித்துள்ளது.

புட்டினின் நெருங்கிய நண்பரான லுகாஷென்கோ "எங்கள் துருப்புக்கள் இந்த நடவடிக்கையில் பங்கேற்கவில்லை," என்று சுட்டிக்காட்டினார்.

அண்மையில் பெலாரஸ் படைகளுடன் கூட்டு பெரிய அளவிலான இராணுவப் பயிற்சிகளை ரஷ்யா நடத்தியது.

இந்த நிலையில், பெலாரஸில் இருந்து ரஷ்ய துருப்புக்கள் உக்ரைனைத் தாக்கியதாக உக்ரைனின் எல்லைக் காவல் சேவை முன்பு கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது. (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .