2025 நவம்பர் 07, வெள்ளிக்கிழமை

பேஸ்புக்குடன் முரண்; வட்ஸ்அப் இணை நிறுவுனர் வெளியேறினார்

Editorial   / 2018 மே 01 , பி.ப. 05:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

வட்ஸ்அப் (WhatsApp) நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியும், இணை நிறுவுனருமான ஜேன் கோயம் கருத்து வேறுபாடு காரணமாக அந்நிறுவனத்திலிருந்து விலகியுள்ளதாக அறிவித்துள்ளார்.

பேஸ்புக் நிறுவனத்துக்கு சொந்தமான வட்ஸ்அப்பின் நிறுவனத்துடன் ஏற்பட்ட வியாபார தந்திரோபாயங்கள் தொடர்பிலான முரண்பாடே, அந்நிறுவனத்திலிருந்து  ஜேன் கோயம் விலகுவதற்கான காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோயம், வட்ஸ்அப்பை, கடந்த 2014ஆம் ஆண்டு பேஸ்புக் நிறுவனத்துக்கு சுமார் 19 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு விற்பனை செய்திருந்தார்.

இந்நிலையில் பேஸ்புக் நிறுவனத்தின் பணிப்பாளர் சபையிலிருந்தும் ஜேன் கோயம் விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக் நிறுவனம் பயனாளிகளின் தனிப்பட்ட விபரங்களை தவறாக பயன்படுத்துவதாக குற்றம்சாட்டியே, அவர் பதவி விலகுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜோன் கோயம் மற்றும், பிரயன் எக்டோன் ஆகிய இருவரும் இணைந்து கடந்த 2009ஆம் ஆண்டு வட்ஸ்அப்பை உருவாக்கியதோடு, கடந்த 2014ஆம்  ஆண்டு பேஸ்புக் நிறுவனம் வட்ஸ்அப்பை 19 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு விற்பனை செய்திருந்தது.

இந்நிலையில் இருவரும், பேஸ்புக் நிறுவனத்தின் பணிப்பாளர் சபையில் கடமையாற்றி வந்த நிலையில், பிரயன் அண்மையில் அந்நிறுவனத்தில் இருந்து விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X