Ilango Bharathy / 2022 ஜனவரி 07 , மு.ப. 08:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றியுள்ள தலிபான்கள்”திருமணத்தில் இசை நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது, சலூன் கடைகளில் தாடியை எடுக்கக் கூடாது, பெண்கள் தொலைக்காட்சித் தொடர்கள் மற்றும் விளம்பரங்களில் நடிக்கக் கூடாது உள்ளிட்ட பல்வேறு கடுமையான சட்டங்களை அமுல்படுத்தி வருகின்றனர்.
மேலும் சட்டங்களை மீறுபவர்கள் மீது கடுமையான தண்டனைகளையும் விதித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஆடையகங்களில் உள்ள அலங்கார பொம்மைகளில் தலை இருக்கக் கூடாது என்ற புதிய சட்டத்தை அமுல்படுத்தியுள்ளனர்.
இது குறித்து அந்நாட்டின் நல்லொழுக்கத்தை மேம்படுத்துதல் அமைச்சகத்தின் தலைவர் அஜிஸ் ரகுமான் கூறும்போது, ‘மனித உருவங்களை காட்சிப்படுத்துவது ஷரியத் சட்டத்துக்கு எதிரானது என்பதால் கடைகளில் உள்ள பொம்மைகளின் தலைகளை துண்டிக்குமாறு நாங்கள் உத்தரவிட்டுள்ளோம்.
அவர்கள் தலையை மட்டும் மூடி வைத்தாலோ அல்லது முழு பொம்மையை மறைத்து வைத்தாலோ அவர்களின் கடை மற்றும் வீடுகளில் கடவுள் ஆசீர்வதிக்க மாட்டார்’ என்று தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து ஆடையகங்களிலுள்ள பொம்மைகளின் தலைகளை சிலர் துண்டிப்பது போன்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
7 hours ago
8 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
8 hours ago
8 hours ago