Editorial / 2019 டிசெம்பர் 19 , பி.ப. 07:24 - 0 - {{hitsCtrl.values.hits}}

பொலிவிய இடைக்கால அரசாங்கத்திடமிருந்தான குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய தேசத்துரோகம், பயங்கரவாதத்துக்காக, பொலிவியாவின் முன்னாள் ஜனாதிபதி ஏவோ மொராலஸுக்கு பிடிவிறாந்தொன்றை பொலிவிய அரச வழக்குத் தொடருநர்கள் பிறப்பித்துள்ளதாக, பொலிவிய பிலிஸின் பொதுமக்கள் மோசடிப் பிரிவின் தலைவர் லூயிஸ் பெர்ணான்டோ குவாராச்சி நேற்று உறுதிப்படுத்தியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ஏவோ மொராலஸ் கடந்த மாதம் பதவி விலக முன்னரும் பின்னரும் இடம்பெற்ற குழப்பங்களின்போது 35 இறப்புகளுக்கு வழிவகுத்த வன்முறை மோதல்களை அவர் ஊக்குவித்தார் என்ற குற்றச்சாட்டுகளை அவருக்கெதிராக பொலிவியாவின் உள்நாட்டமைச்சர் ஆர்துரோ முரில்லோ கொண்டு வந்திருந்தார்.
இந்நிலையில், தங்களது 14 ஆண்டுகள் புரட்சிக்குப் பின்னர் தான் பெற்று சிறந்த பரிசானது, சட்டரீதியற்ற, அரசமைபை மீறிய பிடிவிறாந்தென முன்னாள் ஜனாதிபதி ஏவோ மொராலஸ் டுவீட் செய்திருந்தார்.
பாதுகாப்புப் படைகள், அரசாங்கத்துக்கெதிரான ஆர்ப்பாட்டங்களின் அழுத்தத்தால் தான் இராஜினாமா செய்த பிறகு பொலிவியாவின் ஜனாதிபதியாகப் பதவியேற்ற ஜெனி அனெஸின் இடைக்கால அரசாங்கத்தை கவிழ்க்கும் முயற்சியில் நகரங்களை முடக்குமாறு முன்னாள் ஜனாதிபதி ஏவோ மொராலஸ் ஆதரவாளர்களுக்கு உத்தரவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பொலிவியாவிலிருந்து மெக்ஸிக்கோவுக்குச் சென்றிருந்த முன்னாள் ஜனாதிபதி ஏவோ மொராலஸ், தனக்கு இம்மாதம் 12ஆம் திகதி அகதி அந்தஸ்து வழங்கப்பட்ட ஆர்ஜென்டீனாவுக்கு பின்னர் சென்றிருந்தார்.
18 minute ago
43 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
43 minute ago
49 minute ago