Editorial / 2019 மார்ச் 13 , மு.ப. 09:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
தங்களது விமானநிலையங்களுக்கு வரும், வெளியேறும் அனைத்து போயிங் 737 மக்ஸ் விமானங்களின் இயக்கங்களை சிங்கப்பூரும் அவுஸ்திரேலியாவும், நேற்று (12) இடைநிறுத்தியுள்ளன.
இதேவேளை, ஐக்கிய அமெரிக்க நிறுவனமான போயிங்கின் புதிய விமானமான 737 மக்ஸ் ஆனது, ஐந்து மாதங்களுக்குள் இரண்டாவது விபத்தைச் சந்தித்ததைத் தொடர்ந்து, தமது போயிங் 737 மக்ஸ் விமானங்களையும் இந்தோனேஷியாவும் சீனாவும் நேற்று முன்தினம் தரையிறக்கியிருந்தன,
அந்தவகையில், உலகின் மிகப்பெரிய விமானத் தயாரிப்பு நிறுவனமான போயிங்கின் பங்குகள், ஒரு கட்டத்தில் நேற்று முன்தினம் 13.5 சதவீதம் சரிந்திருந்ததுடன், இறுதியாக ஐந்து சதவீத சரிவுடன் பங்குச்சந்தை முடிவுக்கு வந்த நிலையில், பில்லியன் கணக்கான ஐக்கிய அமெரிக்க டொலர்களை அந்நிறுவனம் இழந்துள்ளது.
இந்நிலையில், போயிங் 737 மக்ஸின் மிகப்பெரிய சந்தையான சீனாவிலுள்ள 97 ஜெட்கள் உள்ளடங்கலாக, தற்போது சேவையிலுள்ள 371 ஜெட்களில், ஏறத்தாழ 40 சதவீதமானவை தரையிறக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
157 பயணிகளுடன் சென்ற எதியோப்பியன் எயார்லைன்ஸின் போயிங் 737 மக்ஸ் விமானம் நிலத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வீழ்ந்து, அதிலிருந்த அனைவரும் கொல்லப்பட்டதே தற்போதைய மேற்குறித்த நிலைக்கு காரணமாகும்.
அந்தவகையில், வேறு நான்கு 737 மக்ஸ் 8 விமானங்களைக் கொண்டிருக்கின்ற எதியோப்பியர் எயார்லைன்ஸ், முன்னெச்சரிக்கையொன்றாக அவற்றைத் தரையிறக்குவதாகத் தெரிவித்துள்ள நிலையில், பிரேஸிலுள்ள கோல் விமானநிறுவனமும் ஆர்ஜென்டீனாவின் அரச விமானநிறுவனமான ஏரோலினெயாஸ் ஆர்ஜென்டீனாவும் மெக்ஸிக்கோவின் ஏரோமெக்ஸிக்கோ விமானநிறுவனமும் மக்ஸ் 8 விமானங்களை இடைநிறுத்தியுள்ளன.
39 minute ago
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
3 hours ago
3 hours ago
4 hours ago