2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

போராட்டக்காரர்களை எதிர்க்கிறார் மக்ரோன்

Editorial   / 2018 டிசெம்பர் 03 , மு.ப. 01:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரான்ஸில், எண்ணெய் விலை உயர்வுக்கு எதிராக ஆரம்பித்த போராட்டங்கள், வன்முறையாக மாறிவரும் நிலையில், தனக்கெதிரான போராட்டக்காரர்களை, “குழப்பங்களை நோக்கிச் செயற்படுவோர்” என, ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் வர்ணித்துள்ளார்.

“வன்முறைகளை நான் எப்போதும் ஏற்கப் போவதில்லை. அதிகாரிகள் தாக்கப்படுவதுவது, வணிகங்கள் கொள்ளையிடப்படுவது, வழிப்போக்கர்கள் அல்லது ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்படுவது ஆகிய நடவடிக்கைகளை, எந்தக் காரணமும் நியாயப்படுத்த முடியாது” என, ஆர்ஜென்டீனாவில் வைத்து, ஜனாதிபதி மக்ரோன் குறிப்பிட்டார்.

ஆர்ஜென்டீனாவில் இடம்பெற்றுவரும் ஜி20 மாநாட்டில், பூகோள விடயங்கள் தொடர்பாகக் கவனஞ்செலுத்தவே ஜனாதிபதி மக்ரோன் விரும்பிய போதிலும், உள்நாட்டில் இடம்பெற்றுவரும் போராட்டங்கள், அவரின் நிலையைப் பலவீனப்படுத்தியுள்ளன எனக் கருதப்படுகிறது.

இப்பிரச்சினை தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்ட அவர், “வன்முறைகள் தொடர்பில் குற்றவாளிகளாக உள்ளோருக்கு, மாற்றங்கள் தேவையாக இல்லை, முன்னேற்றங்கள் தேவையாக இல்லை. அவர்களுக்கு, குழப்பங்கள் தேவையாக உள்ளன. அவர்கள் அடையாளங்காணப்பட்டு, அவர்களது நடவடிக்கைகளுக்காக நீதியின் முன்னால் கொண்டுவரப்படுவர்” எனக் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X