Editorial / 2025 நவம்பர் 06 , மு.ப. 11:16 - 0 - {{hitsCtrl.values.hits}}

மஹியங்கனை, சொரபோர பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மனைவி கத்தியால் குத்தியதில் பலத்த காயமடைந்த சிவில் பாதுகாப்பு அதிகாரி வியாழக்கிழமை (6) மஹியங்கனை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.
கத்தியால் குத்தப்பட்ட நபர், கிராதுருகோட்ட துணை மாவட்ட தலைமையகத்தில் பணியாற்றும் 43 வயதுடைய சிவில் பாதுகாப்பு அதிகாரி என்றும், மஹியங்கனை, சொரபோர மீகஹபிட்டிய பகுதியைச் சேர்ந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மஹியங்கனை, சொரபோர மீகஹபிட்டிய பகுதியில் வசிக்கும் மூன்று குழந்தைகளின் தாயான 42 வயதுடைய பெண் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வீட்டில் தம்பதியினரிடையே ஏற்பட்ட தகராறு அதிகரித்ததை அடுத்து, மனைவி தனது கணவரை கத்தியால் குத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
14 minute ago
16 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
16 minute ago
1 hours ago