Mithuna / 2024 பெப்ரவரி 07 , பி.ப. 03:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
போலந்து பாதுகாப்பு மந்திரி விளாடிசா கோனேக் காமிஸ் செய்தியாளர்களை சந்தித்துப் பேசியபோது அவரிடம் “உக்ரேன் -ரஷ்யா இடையிலா போர் சூழலில் போலந்து மீதான போர் அச்சுறுத்தலுக்கு வாய்ப்பு உள்ளதா?” என கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்தபோது அவர் கூறியதாவது, “அனைத்து வகையான சூழ்நிலைகளையும் நான் எதிர்பார்க்கிறேன். அதில் மோசமானவற்றை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறேன். இன்று நாம் இருக்கும் சூழ்நிலையில் ஒரு பாதுகாப்பு மந்திரியின் பணி அதுதான். நாங்கள் எதற்கும் தயாராக இருக்கிறோம்.
இதனை வெறும் பேச்சுக்காக நான் சொல்லவில்லை. போலந்து இராணுவம் போர் அச்சுறுத்தலுக்குத் தயாராகும் உறுதியான நடவடிக்கைகளை ஏற்கனவே தொடங்கியுள்ளது. பெரிய அளவிலான ஆயுதக் கொள்முதல் மிகவும் முக்கியமானது என்றாலும், ஒவ்வொரு இராணுவ வீரருக்கான தனிப்பட்ட உபகரணங்களையும் நாங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்கிறோம்” என தெரிவித்துள்ளார்.
7 minute ago
16 minute ago
26 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
16 minute ago
26 minute ago
2 hours ago