Ilango Bharathy / 2022 மார்ச் 10 , மு.ப. 11:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
உக்ரேன் மீதான ரஷ்யப் படைகளின் தாக்குதல்களால், உக்ரேனில் இதுவரை 400 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர் எனவும், 800 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சுமார் 20 லட்சம் மக்கள் உக்ரேனில் இருந்து வெளியேறி அருகேயுள்ள நாடுகளில் அடைக்கலம் புகுந்துள்ளதாகவும், நாளுக்கு நாள் ஆயிரக்கணக்கான மக்கள் உக்ரேனை விட்டு வெளியேறி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தலைநகரான கீவ் பகுதியில் இருக்கும் உயிரியல் பூங்காவில் சுமார் 4000 விலங்குகள் மீட்க யாரும் இன்றி காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த உயிரியல் பூங்கா உள்ள பகுதியில் தொடர்ந்து வெடி குண்டு தாக்குதல்கள் நடத்தப்படுவதால், உண்டாகும் பலத்த சத்தத்தால் விலங்குகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
3 hours ago
7 hours ago
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago
7 hours ago
9 hours ago