Ilango Bharathy / 2022 மார்ச் 14 , மு.ப. 09:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
உக்ரேனில் குடியிருப்புகள், வைத்தியசாலைகள் உள்ளிட்ட பல இடங்களில் ரஷ்யா தீவிரமாகத் தாக்குதல் நடத்தி வருகின்றது.
அந்த வகையில் மரியுபோல்( Mariupol) நகரில் உள்ள மகப்பேறு வைத்தியசாலையொன்றிலும் கடந்த 9 ஆம் திகதி ரஷ்யா குண்டுத் தாக்குதல் நடத்தியுள்ளது.

இத்தாக்குதலினால் குறித்த வைத்தியசாலையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டிருந்த யூடியுப் பிரபலமான மரியானா விஷேகிர்ஸ்கயா (Mariana Vishegirskaya) என்ற பெண் காயமடைந்த நிலையில் அங்கிருந்து வேறு ஒரு வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இந்நிலையில் அப்பெண் கடந்த 11 ஆம் திகதி அங்கு பெண் குழந்தையொன்றையும் பெற்றெடுத்துள்ளார்.

அக்குழந்தைக்கு வெரோனிகா (Veronika) எனப் பெற்றோர் பெயர் சூட்டியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது குறித்து வெளியான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
3 hours ago
7 hours ago
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago
7 hours ago
9 hours ago