Ilango Bharathy / 2022 டிசெம்பர் 14 , மு.ப. 10:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரபல சமூக வலைத்தளமான டுவிட்டரை கைப்பற்றியுள்ள டெஸ்லா ,ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் ஸ்தாபகர் எலோன் மஸ்க் (Elon musk) அண்மைக்காலமாக டுவிட்டரில் பல மாற்றங்களை செய்து வருகின்றார்.
குறிப்பாக டுவிட்டரில் அதிகாரப்பூர்வ கணக்கு எனப்படும் ‘நீல வண்ண டிக் குறியீட்டினைப்‘ (ப்ளூ டிக் ) பயன்படுத்த மாதம் 8 டொலர்கள் வசூலிக்கும் திட்டத்தினையும் அமுல்படுத்தினார்.

இதனைத் தொடர்ந்து ஏராளமான கணக்குகள் கட்டணம் செலுத்தி ப்ளு டிக் குறியீடுகளைப் பெற்றனர். அதே சமயத்தில் ஏராளமான போலிக் கணக்குகளும் கட்டணம் செலுத்தி நீல வண்ண டிக் குறியீட்டினைப் பெற்றுள்ளன.
இந்நிலையில் தவறான நபர்களுக்கு ‘ ப்ளூ டிக்‘ வழங்குவதை தடுக்கும் விதமாக தொலைபேசி வாயிலாக சரிபார்க்கும் முறையை டுவிட்டர் அறிமுகப்படுதியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அந்தவகையில் ப்ளூ டிக் வழங்கப்பட்டவர்களுக்கு அவர்கள் இணைத்திருக்கும் செல்லிடப்பேசியின் மூலமாக அழைப்பு மேற்கொள்ளப்பட்டு சரி பார்க்கப்பட்ட பின் ப்ளூ டிக் மீண்டும் உறுதி செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
26 Oct 2025
26 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 Oct 2025
26 Oct 2025