2025 டிசெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

மெக்சிகோவில் தடம் புரண்ட ரயில்: 13 பேர் பலி

Freelancer   / 2025 டிசெம்பர் 30 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

மெக்சிகோவின் தென்கிழக்கு ஒசாகா பிராந்தியத்தில் ரயில் தடம் புரண்ட விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர், 100 பேர் காயமடைந்தனர் என்று மெக்சிகோ கடற்படை தெரிவித்துள்ளது.

மெக்சிகோ வளைகுடாவுக்கும் பசிபிக் பெருங்கடலுக்கும் இடையே பயணித்த ரயிலில் 241 பயணிகளும், 9 பணியாளர்களும் இருந்தனர்.

நிசாண்டா நகரத்துக்கு அருகே ஒரு வளைவில் திரும்பும்போது ரயில் தடம் புரண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இது குறித்து விசாரணை நடைபெற்று வருவதை கடற்படை அதிகாரிகள் உறுதிப்படுத்தினார்.

இந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர், 98 பேர் காயமடைந்தனர், அவர்களில் 36 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காயமடைந்தவர்களில் ஐந்து பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மெக்சிகோ ஜனாதிபதி கிளாடியா ஷெயின்பாம் தெரிவித்தார்.

பசிபிக் கடற்கரையில் உள்ள சலினா குரூஸ் துறைமுகத்தை வளைகுடா கடற்கரையில் உள்ள கோட்சகோல்கோஸுடன் இணைக்கும் இந்த இன்டர்ஓசியானிக் ரயிலில் 2 என்ஜின்களும், 4 பயணிகள் பெட்டிகளும் இருந்தன என்று கடற்படை தெரிவித்துள்ளது. (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X