Ilango Bharathy / 2023 பெப்ரவரி 09 , மு.ப. 10:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
மனிதர்கள் அறியாமலே அவர்களது உடலுக்குள் செல்லும் மைக்ரோபிளாஸ்டிக் நச்சுத் தன்மையையும், நோய்களையும் ஏற்படுத்தலாம் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 5 மில்லி மீற்றருக்கும் குறைவான பிளாஸ்டிக் துகள்கள் நாம் வாழும் சூழலில் இருப்பதாகவும், கடல்கள், ஆறுகள், மண் மற்றும் மழைகளில் கூட கலந்திருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

காலப்போக்கில் இந்த இரசாயனத்தை மக்கள் வெளியேற்றுவதை விட உள்ளிழுக்கும் போக்கு அதிகரிக்கும் என்றும், இதனால் மனித உடலில் நச்சுத்தன்மை, நோய் ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய ஆய்வில், மீன்கள், நன்கொடை செய்யப்படும் இரத்தம் மற்றும் தாய்ப்பாலிலும் மைக்ரோபிளாஸ்டிக் இருப்பதையும் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
2 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
6 hours ago