Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2024 ஒக்டோபர் 13 , பி.ப. 03:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் மூன்று வாரங்களே உள்ள நிலையில், கமலா ஹாரிஸ் மற்றும் டொனால்ட் டிரம்ப் ஆகியோரின் பிரசார நடவடிக்கை தீவிரமடைந்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வருகிற நவம்பர் மாதம் நடைபெறவுள்ள நிலையில், ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை ஜனாதிபதி கமலா ஹாரிசும் (வயது 59), குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பும் (வயது 78) போட்டியிடுகின்றனர்.
அவர்கள் தீவிர பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள். சில நாள்களுக்கு முன்பு இரு வேட்பாளர்களும் நேரடி விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இதன்படி, ஒக்டோபர் 11ஆம் திகதி நிலவரப்படி, முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் 46 சதவீதத்துடன் ஒப்பிடும்போது, 48.5 சதவீத ஆதரவுடன், துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் 2.5 சதவீத அதிகரிப்புடன், வாக்குச் சாவடியில் முன்னிலையில் உள்ளார்.
‘270toWin’ என்ற இணையதளத்தில் இருந்து பெறப்பட்ட மற்றொரு கருத்துக்கணிப்பு படி, சராசரி, 49.3 சதவீத ஆதரவுடன் ஹாரிஸ் மீண்டும் ஓரளவு முன்னிலையில் காட்டுகிறது. அதேசமயம், டிரம்புக்கான ஆதரவு 46.5 சதவீதமாக உள்ளது.
37 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
1 hours ago
1 hours ago