2025 நவம்பர் 07, வெள்ளிக்கிழமை

மணல் புயல் மற்றும் இடி, மின்னல் தாக்கங்களால் 41 பேர் உயிரிழப்பு

Editorial   / 2018 மே 14 , மு.ப. 11:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின், உத்தர பிரதசம், மேற்கு வங்காளம், ஆந்திர பிரதேசம் மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களை, நேற்று (13) தாக்கிய மணல் புயல் மற்றும் இடி, மின்னலால், சுமார் 41 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடும் காற்றுடன்கூடிய கனமழை பெய்து வருவதால் இடி, மின்னல் தாக்கங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ள இந்திய ஊடகங்கள், மரங்கள் சரிந்து ரயில் பாதைகளில் விழுந்துள்ளதால் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பலத்த காற்று வீசுவதால் விமான சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் செய்தி வௌியிட்டுள்ளது.

இதேவேளை, உத்திர பிதேசத்தில் எட்டு பேரும்,மேற்கு வங்காளத்தில் 12 ​பேரும், ஒன்பது பேர் ஆந்திரப் பிரதேசத்தில் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பலத்த காற்றுடனான கனமழை எதிர்வரும் 72 மணித்தியாலங்களுக்கு தொடரும் எனவும் அந்நாட்டு அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவிப்பு விடுத்துள்ளது.

48-72 மணித்தியாலங்கள் வரையில், இடி, மின்னல் தாக்கங்கள் காணப்படும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், காற்றுடன் கூடிய இ​டி, மின்னல் தாக்கங்கள், பஞ்சாப், ஹரியானா, சன்டிகர், டெல்லி, உத்திர பிரேதசம், பீஹார், தெலுங்கானா, கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் கேரளா உள்ளிட்ட ஆகிய மாநிலங்களிலும் காணப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X