2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

மனைவிக்காக இப்படியா செய்வது?

Ilango Bharathy   / 2023 பெப்ரவரி 22 , மு.ப. 10:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தாய்லாந்தின் சரபுரி மாகாணத்தைச் சேர்ந்தவர் ‘வால்‘.  இவருக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் தனது  8 ஆவது ஆண்டு திருமண நாளைக் கொண்டாடும் வகையில் வால்,  தனது மனைவிக்கு வித்தியாசமான பரிசொன்றைக் கொடுக்க விரும்பியுள்ளார்.

இதனையடுத்து பச்சை குத்தும் நிலையமொன்றுக்குச் சென்ற அவர் தனது  திருமண சான்றிதழை மணிக்கட்டில் முழுதாகப்  பச்சை குத்தியுள்ளார்.

இதற்கு அவர் சுமார் 8 மணி நேரம் ஒரே இடத்தில்  அமர்ந்திருக்க வேண்டியிருந்துள்ளதாக் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவரது கையைப் பார்த்த மனைவில் அதிர்ச்சியில் உறைந்து போனார் எனவும் தனது கைப் பார்க்கும் போதெல்லாம் தான் மனைவியுடன் கழித்த நல்ல நேரங்கள் நினைவுக்கு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X