Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Ilango Bharathy / 2022 டிசெம்பர் 08 , மு.ப. 10:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரித்தானிய மகாராணி 2ஆம் எலிசபெத்தின் மரணத்துக்குப் பின்னர் மன்னராக பதவியேற்றுள்ள 3ஆம் சார்லஸ், நாடு முழுவதும் பயணம் செய்து, மக்களைச் சந்தித்து வருகிறார்.
இந்நிலையில், வடக்கு லண்டனில் இருந்து 46 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள லுட்டன் நகரத்துக்கு நேற்று முன்தினம் சென்ற(06) அவர், அங்குள்ள மக்களைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.
இதன்போது எதிர்பாராத விதமாக கூட்டத்தில் இருந்து மன்னரை நோக்கி முட்டையொன்று வீசப்பட்டது.
இதனையடுத்து உடனடியாக மன்னரை வேறொரு இடத்துக்கு அவரது பாதுகாப்பு அதிகாரிகள் அழைத்துச் சென்றனர்.
இந்நிலையில் இச்சம்பவத்துடன் தொடர்புடைய நபரைப் பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்னர் மீது முட்டை வீசப்படுவது இது முதற் தடவை அல்ல.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மன்னர் சார்லஸ் மற்றும்அவரது மனைவி ராணி கமிலா யார்க் நகரத்துக்கு சென்றபோது அவர்கள் மீது 23 வயதான இளைஞர் ஒருவர் முட்டை வீசியிருந்தார் என்பது, பின்னர் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
46 minute ago
17 May 2025