2025 ஒக்டோபர் 08, புதன்கிழமை

மியான்மர் புத்த மத விழாவில் பாராகிளைடர் குண்டுகளை வீசியதில் 24 பேர் பலி

R.Tharaniya   / 2025 ஒக்டோபர் 08 , பி.ப. 01:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

மியன்மாரில் புத்த திருவிழாவின்போது, இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் 24 பேர் உயிரிழந்துள்ளதாக  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மத்திய மியன்மாரில் தாடிங்யுட் என்ற புத்த திருவிழாவிற்காக தேசிய விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த விழாவை கொண்டாட ஏராளமான மக்கள் கூடியிருந்தனர். அப்போது பாராகிளைடர் மூலம் இயக்கப்படும் வெடிக்குண்டுகள் அந்த கூட்டத்தில் வீசப்பட்டதில், குண்டு வெடித்து 24 பேர் பரிதாபமாக பலியானார்கள். பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மியன்மாரில் ஆட்சிக் கவிழ்ப்பு நடந்து நீண்ட காலமாக இராணுவ ஆட்சி நடந்து வரும் நிலையில், வரும் டிசெம்பரில் மக்களாட்சியை கொண்டு வர தேர்தல் நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நடந்துள்ள இந்த வெடிக்குண்டு தாக்குதல் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒளி திருவிழா என அழைக்கப்படும் தாடிங்யுட் திருவிழாவில் கூடிய மக்கள் இராணுவ ஆட்சிக்கும், எதிர்வரும் ஒரு சார்பான தேர்தல் நடவடிக்கைகளுக்கும் எதிராக முழக்கம் செய்த நிலையில், மியன்மார் இராணுவம்தான் இந்த தாக்குதலை செய்ததாக குற்றச்சாட்டுகளை மக்கள் முன்வைத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X