2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

மயிரிழையில் சிறுமியின் உயிரைக் காப்பாற்றிய நாய்கள்

Ilango Bharathy   / 2023 பெப்ரவரி 14 , மு.ப. 10:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

துருக்கி- சிரியா எல்லையில் கடந்த 6 ஆம் திகதி  சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று ஏற்பட்டது.

இதில் இருநாடுகளையும் சேர்ந்த  சுமார்  33,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இதனையடுத்து நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகளை  மேற்கொள்வதற்காக இந்திய மீட்புக்குழுவினர் அண்மையில் துருக்கி சென்றிருந்தனர்.

இதன்போது  மீட்புக் குழுவினருடன் ஜூலி மற்றும் ரோமியோ  என்ற இரு மோப்ப நாய்களும் அழைத்துச் செல்லப்பட்டிருந்தன.

 இந்நிலையில் குறித்த இரு மோப்ப நாய்களும் நூர்தாகியில், இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியிருந்த 6  வயதான  சிறுமியொருவரைக்   காப்பாற்றியுள்ளதாகத்  தகவல் வெளியாகியுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .