2024 மார்ச் 28, வியாழக்கிழமை

மார்பகத்தால் மன உளைச்சல்; நிதி திரட்டும் பெண்

Ilango Bharathy   / 2022 நவம்பர் 29 , மு.ப. 10:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பிரித்தானியாவைச் சேர்ந்தவர் ஜாஸ்மின் மெக்லெட்சி. 33 வயதான இவர் கேக் தயாரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றார். இவருக்கு 5 வயதில் ஒரு மகளும் உள்ளார்.

இந்நிலையில் அவருக்கு  குழந்தை பிறந்த பின்னர் உடல் எடை மற்றும் மார்பகங்களின் அளவு பெரிதாகிவிட்டதாக்க கூறப்படுகின்றது.

 

தனது பெரிய மார்பகங்கள் காரணமாக  பலரும் தன்னை

கிண்டல் செய்து வருவதாகவும், இதனால் மிகுந்து மனஉளைச்சளுக்கு ஆளாகி இருப்பதாகவும் அவர்  கவலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஜாஸ்மின் மேலும் தெரிவிக்கையில்
"எனது பெரிய அளவிலான மார்பகங்கள் எனக்கு பிடிக்கவில்லை. எங்கு சென்றாலும் அசெளகரிகமான உணர்வை அளிக்கின்றன. உறங்கும்போது கூட அவற்றின் எடையால் அவதிப்படுகிறேன். மேலும் மார்பகத்தின் அளவைக் குறைக்கும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளும்படி மருத்துவர்கள் என்னை  அறிவுறுத்தி வருகின்றனர்.

இதனால் அறுவைச் சிகிச்சை செய்வதற்காக  நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X