Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Freelancer / 2022 டிசெம்பர் 26 , மு.ப. 11:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
லஞ்சம் மற்றும் சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கில் மாலைத்தீவு முன்னாள் ஜனாதிபதி அப்துல்லா யாமீனுக்கு 11 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 5 மில்லியன் அமெரிக்க டொலா் அபராதமும் விதித்து, அந்நாட்டின் குற்றவியல் நீதிமன்றம் நேற்று தீா்ப்பளித்தது.
மாலைத்தீவு ஜனாதிபதியாக கடந்த 2013 முதல் 2018 வரை பதவி வகித்தவரான அப்துல்லா யாமீன், அரசுக்கு சொந்தமான தீவு ஒன்றை குத்தகைக்கு அளிக்க லஞ்சம் பெற்றாதக வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் அவா் மீதான குற்றச்சாட்டுகளை உறுதி செய்த குற்றவியல் நீதிமன்றம், சட்டவிரோத பணப் பரிவா்த்தனை குற்றத்துக்கு 7 ஆண்டுகள், லஞ்சம் பெற்ற குற்றத்துக்கு 4 ஆண்டுகள் என மொத்தம் 11 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது.
அப்துல்லா யாமீனுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்படுவது இது முதல்முறையல்ல. கடந்த 2019 இல் அரசுப் பணத்தை சொந்த ஆதாயத்துக்கு பயன்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டாா். ஆனால், அவருக்கு எதிரான ஆதாரங்களில் குறைபாடுகள் உள்ளதாகவும், குற்றச்சாட்டுகள் முழுமையாக நிரூபிக்கப்படவில்லை என்றும் கூறி, 2 ஆண்டுகளுக்கு பிறகு அந்த தீா்ப்பை உயர்நீதிமன்றம் ரத்து செய்தமை குறிப்பிடத்தக்கது. R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago
8 hours ago