Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Freelancer / 2023 ஜூலை 30 , பி.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
உக்ரேன் - ரஷ்யா இடையேயான போர், நேற்று (30) ஞாயிற்றுக்கிழமையுடன் 522 வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரேனுக்கு ஆயுத உதவிகளை அமெரிக்கா உள்பட மேற்கத்திய நாடுகள் வழங்கி வருகின்றன.
போர் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில் ரஷ்யா மீது உக்ரேன் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. ரஷ்ய தலைநகர் மாஸ்கோ மீது ஞாயிற்றுக்கிழமை (30) அதிகாலை 3 மணியளவில் உக்ரேன் டிரோன்கள் தாக்குதல் நடத்தின. இதில் ஒரு டிரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது. எஞ்சிய 2 டிரோன்களும் மின்னணு ஆயுதங்கள் மூலம் தடுக்கப்பட்டன.
தடுக்கப்பட்ட டிரோன்கள் மாஸ்கோவில் உள்ள சர்வதேச வர்த்தக மைய கட்டடம் மீது மோதின. இதில், யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும், தாக்குதல் முறியடிக்கப்பட்டதாகவும் ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலை தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களுக்காக விமான நிலையம் மூடப்பட்டது.
உக்ரேன் எல்லையில் இருந்து ரஷ்ய தலைநகர் மாஸ்கோ 500 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
14 May 2025
14 May 2025
14 May 2025