Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2022 மார்ச் 21 , பி.ப. 10:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
உக்ரைனின் மரியபோலில் அனைத்தையும் அழித்தமை, குண்டுவீசி அனைவரையும் கொன்றமை என இப்போது நடப்பது ஒரு மாபெரும் போர்க் குற்றமாகும் என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கை செயலாளர் ஜோசப் போரெல் தெரிவித்தார்.
உக்ரைனில் தொடர்ந்து தாக்குதல் நடத்தில் வரும் ரஷ்யா மீது மேலதிக பொருளாதார தடைகள் விதிப்பது பற்றி ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் பிரஸ்ஸல்ஸில் நடைபெற்றது.
அந்தக் கூட்டத்தில் பேசிய லிதுவேனியா மற்றும் அயர்லாந்தின் வெளியுறவு அமைச்சர்கள், “ரஷ்யா மீதான, குறிப்பாக அதன் இலாபகரமான எரிசக்தி துறையை இலக்காகக் கொண்டு, பொருளாதாரத் தடைகளை ஐரோப்பிய ஒன்றியம் அதிகரிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளனர்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் பெரும்பாலான நாடுகள் அவற்றின் 40% எரிவாயுவுக்கு ரஷ்யாவை நம்பியுள்ளன.
இந்நிலையில் , ரஷ்ய எண்ணெயை குறிவைப்பது என்பது 27 நாடுகளை கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்துக்கு கடினமான தெரிவாகும்.
ஆனால் அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஆகியவை ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதியை முற்றிலும் தடை செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago