Ilango Bharathy / 2022 ஜனவரி 18 , பி.ப. 04:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
அண்மைக்காலமாக வட கொரியா கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. பொருட்களின் விலைவாசி விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளதால் அந்நாட்டு மக்கள் பெரும் இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருவதாகக் கூறப்படுகிக்றது.
எவ்வாறு இருப்பினும் அந்நாட்டின் ஏவுகணை மோகம் என்பது தீர்ந்தபாடில்லை. குறிப்பாக கண்டம் விட்டு கண்டம் தாண்டி தாக்குதல் நடத்தும் பாலிஸ்டிக் ரக ஏவுகணைகளை அந்நாட்டு தொடர்ந்து சோதித்து வருகிறது.

வடகொரியாவின் ஏவுகணை சோதனை பிற நாடுகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன் காரணமாக வட கொரியா மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. எனினும், அமெரிக்காவின் பொருளாதார தடையை பொருட்படுத்தாத வட கொரியா இம்மாதத்தில் மூன்றாவது முறையாக ஏவுகணைகளை சோதித்துள்ளது.
மேலும் இது தொடர்பான புகைப்படத்தையும் அந்நாட்டு அரசு ஊடகம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
5 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago