2025 நவம்பர் 05, புதன்கிழமை

முதலமைச்சர் அமரிந்தர் சிங்குடனான மோதல்: அமைச்சரவைக் கூட்டத்தை புறக்கணித்த சித்து

Editorial   / 2019 ஜூன் 07 , மு.ப. 08:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் பஞ்சாப் மாநில முதலமைச்சர் அமரிந்தர் சிங்குடனான மோதலொன்றுக்கு மத்தியில் இருக்கும் பஞ்சாப் மாநில உள்ளூராட்சி சபைகளுக்கான அமைச்சரவை அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்து, அமைச்சரவைக் கூட்டமொன்றை நேற்று (06) தவிர்த்து, பேஸ்புக் நேரலையூடாக செய்தியாளர் மாநாடொன்றை நடத்தியுள்ளார்.

கடந்த மாதம் இடம்பெற்ற இந்திய நாடாளுமன்றத்துக்கான கீழ்ச்சபைக்கான தேர்தலையடுத்த முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தையும் முன்னாள் கிரிக்கெட் வீரரான நவ்ஜோத் சிங் சித்து தவிர்த்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதவிர, நாடாளுமன்ற கீழ்ச்சபைக்கான தேர்தல்கள் தொடர்பாக ஆராயப்பட அமரிந்தர் சிங்கால் கூட்டப்பட்ட கூட்டத்தையும் நவ்ஜோத் சிங் சிந்து தவறவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அம்ரிஸ்டரில் தனது மனைவி நவ்ஜோத் கெளர் போட்டியிடுவதை அமரிந்தர் சிங் தடுப்பதாக நவ்ஜோத் சிங் சித்து குற்றஞ்சாட்டுகையில், நவ்ஜோத் சிங் சித்து அவரது அமைச்சரவை மோசமாகக் கையாண்டமையாலேயே நகர்ப்புறப் பகுதிகளில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சிறப்பாகச் செயற்படத் தவறியுள்ளது என அமரிந்தர் சிங் கூறியுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X