2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

முதியவருக்காக வீட்டை தூக்கிய மக்கள்

Ilango Bharathy   / 2022 டிசெம்பர் 05 , மு.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பிலிப்பைன்ஸில் உள்ள கிராமமொன்றில் வசித்து வரும் முதியவருக்காக, அப்பகுதி மக்கள் அவரது வீட்டைத் தூக்கி வேறொரு இடத்தில்  வைத்த  சம்பவம் ஆச்சரியத்தையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

குறித்த முதியவர் தன்னுடைய உறவினர்களுடன் தனது இறுதிக் காலத்தைக் கழிக்க விரும்புதாகத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இவரின் ஆசையை நிறைவேற்றுவதற்காக அப்பகுதி மக்கள் அனைவரும் சேர்ந்து  சுமார் 7 அடி உயரமுள்ள  அவருடைய வீட்டை தூக்கி அவரது உறவினர்களின் வீடுகளுக்கு  அருகில் வைத்துள்ளனர்.

மொத்தமாக  24 நபர்கள் சேர்ந்து குறித்த வீட்டைத் தூக்கியுள்ளார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது குறித்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X