2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

முன்னாள் பெண் எம்.பி. சுட்டுக் கொலை

Ilango Bharathy   / 2023 ஜனவரி 17 , மு.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஆப்கானிஸ்தானில் முன்னாள் பெண் எம்.பி ஒருவரை  மர்ம நபர்கள் சிலர்  சுட்டுக் கொலைசெய்த சம்பவம்  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் , தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியதிலிருந்து அங்கு பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர்.

அதிலும் குறிப்பாக பெண்கள் ஆண்களின் துணையின்றி வெளியே செல்வதற்கும், உடற்பயிற்சி நிலையங்கள் மற்றும்  பூங்காக்களுக்குச் செல்வதற்கும், உயர் கல்வி கற்பதற்கும், விளம்பரங்களில் நடிப்பதற்கும், தொலைக்காட்சிகளில் தோன்றுவதற்கும் தலிப்பான் அரசு தடை விதித்திருந்தமை சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்து.

அதேசமயம் அங்கு வன்முறை சம்பவங்களும், படுகொலைகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இந்நிலையில், அமெரிக்க ஆதரவு அரசாங்கத்தில் எம்.பி.யாக இருந்த ‘ முர்சால் நபிஜாதா ‘ என்ற பெண்தலைவரும், அவரது பாதுகாவலரும்  காபூலில் உள்ள அவரது வீட்டில் வைத்து நேற்று முன்தினம்(15)  மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளமை உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X