Mithuna / 2024 பெப்ரவரி 26 , மு.ப. 10:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
இப்படி எல்லாம் கூட சாதனை படைக்க முடியுமா? என வியக்க வைக்கிறார்கள் சிலர். அந்த வகையில் டென்மார்க்கை சேர்ந்த பீட்டர் வான் டாங்கன் புஸ்கோவ் வித்தியாசமான முறையில் ஒரு சாதனை படைத்துள்ளார்.
39 வயதான அவர் தனது மூக்கு துவாரத்திற்குள் 68 தீக்குச்சிகளை திணித்து கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார். இந்த சாதனையை படைத்த முதல் நபர் இவர் ஆவார்.
இதுகுறித்து அவர், “எனக்கு மிகப்பெரிய நாசி மற்றும் மிகவும் நீளமான தோல் உள்ளது. அது எனக்கு சாதனை படைக்க உதவியது என்று நம்புகிறேன்” என தெரிவத்துள்ளார்.
கின்னஸ் சாதனை அமைப்பின் தகவல்படி புஸ்கோவ், பல சவால்களுக்கு மத்தியில் இந்த தீப்பெட்டி சவாலை தேர்ந்தெடுத்ததாக கூறப்பட்டுள்ளது. சிறு வயதில் கூட மூக்கில் பொருட்களை செருகும் ஆசை தனக்கு இருந்ததில்லை என கூறும் புஸ்கோவ் தற்போது சாதனைக்காக இந்த சவாலை ஏற்றதாக கூறினார். மேலும் நான் எப்போதும் வாழ்க்கையின் சுவாரஸ்யமான மற்றும் வித்தியாசமான அம்சங்களை தேட முயற்சிப்பேன் என்றார்.
4 hours ago
5 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
5 hours ago
5 hours ago