Shanmugan Murugavel / 2022 ஜனவரி 20 , பி.ப. 12:03 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஜேர்மனியின் முன்னாள் சான்செலர் அங்கெலா மேர்க்கலுக்கு, பூகோள பொதுப் பொருள்கள் தொடர்பான ஆலோசனை சபையில் உயர் மட்ட பதவி ஒன்று வழங்கப்பட்டதாக, ஐக்கிய நாடுகளின் உள்மட்டங்களுக்குள் உள்ள தகவல் மூலங்களை மேற்கோள்காட்டி டொச்சே பிரஸ்ஸே-ஏஜென்டூர் நேற்று செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த சபையின் நோக்கமானது இதில் குறிப்பிடப்படாதபோதும், இவ்வகையான சபைகள் வழமையாக ஓசோன் படலம், விமானப் பாதுகாப்பு, உலக வர்த்தகம் போன்றவற்றையே கையாளுவதாகக் குறிப்பிட்டுள்ளது.
மேர்க்கலுக்கு ஐக்கியு நாடுகளின் செயலாளர் நாயகம் அந்தோனியோ குட்டரெஸ் தனிப்பட்ட ரீதியில் கடிதம் எழுதியதாகக் கூறப்படுகிறது. எவ்வாறெனினும் இப்பதவியை மேர்க்கல் ஏற்பதற்கான வாய்ப்புகள் குறைவு எனக் கூறப்படுகிறது.
16 ஆண்டுகள் பதவியில் இருந்த பின்னர் கடந்த மாதமே மேர்க்கல் பதவியிலிருந்து விலகியமை குறிப்பிடத்தக்கது.
5 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago