Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 12, திங்கட்கிழமை
Editorial / 2024 மே 12 , பி.ப. 06:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்காவில் உள்ள மிச்சகன் பகுதியில் வணிக வளாகம் ஒன்று இயங்கி வருகிறது. இதன் மேற்கூரையில் சுமார் 1 வருடமாக 34 வயது பெண் வசித்து வந்ததை சமீபத்தில் கண்டறிந்துள்ளனர்.
அந்த மேற்கூரையில் 5 அடி அகலமும், 8 அடி உயரமும் உள்ள ஒரு கதவு உள்ளது. மேலும் ஒரு சிறிய மேஜை, கம்ப்யூட்டர், காபி மேக்கர், அவரது உடை மற்றும் வீட்டில் வைத்திருக்கக்கூடிய சில பொருட்களையும் அங்கே வைத்து அவர் வசித்து வந்துள்ளார்.
மேற்கூரைக்கு செல்ல சரியான வழி இல்லாத நிலையில், பக்கத்தில் உள்ள கட்டிடங்கள் மூலமாக அவர் தினமும் அங்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் வணிக வளாகத்தில் மேற்கூரைக்கு செல்லும் பாதையில் கம்பி இருப்பதை கண்டறிந்த ஒப்பந்ததாரர் அதுதொடர்பாக ஆய்வு செய்த போது தான் மேற்கூரை பகுதியில் இளம்பெண் 1 வருடமாக வசித்து வந்தது கண்டறியப்பட்டது.
இதுதொடர்பாக பொலிஸார் அந்த பெண்ணிடம் விசாரித்த போது தங்குவதற்கு உரிய வீடு இல்லாததால் மேற்கூரையில் வசித்து வந்ததாக அவர் கூறி உள்ளார். பின்னர் பொலிஸார் அவரை எச்சரித்ததை தொடர்ந்து அவர் அங்கிருந்து செல்வதாக ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
39 minute ago
1 hours ago
2 hours ago