Ilango Bharathy / 2022 பெப்ரவரி 03 , மு.ப. 11:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜேர்மனியில் உள்ள அருங்காட்சியகம் ஒன்றில் பிரித்தானிய மகாராணி எலிசபெத்தின் சிலை மொட்டைத்தலையுடன் வைக்கப்பட்ட சம்பவம் உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இது குறித்துக் கருத்துத் தெரிவித்த அவ்வருங்காட்சியக நிர்வாகப் பங்குதாரரான சுசன்னே ப்வர்பர்( Susanne Faerber)” 'நாங்கள் பணத்தைச் சேமிப்பதற்காக இவ்வாறு செய்ய வேண்டியதாயிற்று. பார்வையாளர்களுக்குத் தெரியும் அளவிலான தலைமுடியினை மட்டுமே நாங்கள் பொருத்தியுள்ளோம். இது ஒரு மெழுகு சிற்பம் தான், உண்மையான நபர் அல்ல, இதை எப்போதும் மனதில் கொள்ள வேண்டும்' எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன் குறித்த அருங்காட்சியகத்தில் டொனால்ட் ட்ரம்ப், போப் பெனடிக்ட் XVI, காலநிலை ஆர்வலர் கிரேட்டா துன்பெர்க் மற்றும் ஜேர்மனியின் முன்னாள் ஜனாதிபதி ஏஞ்சலா மெர்க்கல் போன்ற பிரபலங்களின் சிலைகள் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

3 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago