2025 ஓகஸ்ட் 07, வியாழக்கிழமை

மோடியின் அதிரடி செயல்

Freelancer   / 2022 பெப்ரவரி 25 , மு.ப. 11:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

உக்ரைனில் நடக்கும் வன்முறையை முடிவுக்கு கொண்டு வருமாறு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினிடம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் கோரிக்கை  விடுத்துள்ளார்.

"ரஷ்யாவிற்கும் நேட்டோ குழுவிற்கும் இடையிலான வேறுபாடுகள் நேர்மையான இதை  நேர்மையான உரையாடல் மூலம் மட்டுமே தீர்க்கப்படும் என்று மோடி தனது நீண்டகால நம்பிக்கையை மீண்டும் வலியுறுத்தினார்" என்று அவரது அலுவலகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் முழு அளவிலான ஆக்கிரமிப்பை இந்தியா கண்டிக்கவில்லை. அத்துடன் பொருளாதாரத் தடைகளையும் ரஷ்யாவுக்கு எதிராக விதிக்கவில்லை. 

சோவியத் யூனியன் காலத்தில் இருந்தே இரு நாடுகளுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு உள்ளமை குறிப்பிடத்தக்கது. (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .