2025 மே 07, புதன்கிழமை

மோடியை வைத்து காரை ஓட்டிய புடின்

Freelancer   / 2024 ஜூலை 09 , பி.ப. 03:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஷ்யா சென்றுள்ள பிரதமர் மோடியை, எலெக்ட்ரிக் காரில் அமர வைத்து, ரஷ்ய ஜனாதிபதி புடின் ஓட்டி செல்லும் காணொளி சமூகவலைதளத்தில் பரவி வருகிறது.

இந்தியா - ரஷ்யா இடையிலான, 22ஆவது வருடாந்த உச்சி மாநாடு, ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் நேற்று (09) நடைபெற்றது.

இதில் பங்கேற்க, புதுடெல்லியில் இருந்து சிறப்பு விமானத்தில் பிரதமர் மோடி கடந்த 8ஆம் திகதி ரஷ்யா புறப்பட்டுச் சென்றார்.

இந்நிலையில், மொஸ்கோவில் உள்ள கார்ல்டன் ஹோட்டலுக்கு சென்ற பிரதமர் மோடியை வரவேற்ற ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இரவு விருந்து அளித்தார்.

இந்நிலையில் நேற்று அவரை, மின்சார காரில் அமர வைத்து, ஜனாதிபதி மாளிகை வளாகத்தில் புடின் சுற்றி வந்தார். இந்த காணொளி சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.S


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X