Editorial / 2019 ஜூலை 09 , பி.ப. 08:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
இராணுவம் முதலாவது என்ற வியூகத்திலிருந்து சமாதானம் முதலாவது என்ற வியூகத்துக்கு நகர்ந்து, தமது படைப் பிரசன்னத்தை போரால் பாதிக்கப்பட்ட யேமனில் குறைக்கவுள்ளதாக ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளது.
யேமனின் தென் துறைமுகமான ஏடன், மேற்குக் கரையோரம் உள்ளடங்கலான பகுதிகளிலிருந்து தமது படைகள் சிலவற்றை ஐக்கிய அரபு அமீரகம் அகற்றியுள்ளதாக பெயரிடப்படாத அந்நாட்டு அதிகாரியொருவர் நேற்று முன்தினம் தெரிவித்ததாக செய்தி முகவரகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஹொடெய்டாவில் வியூகம், உத்தி காரணமாக படை அளவுகளை தாங்கள் குறைத்துள்ளதாகத் தெரிவித்துள்ள குறித்த அதிகாரி, இதை இராணுவம் முதலாவது என்ற உத்தியிலிருந்து சமாதானம் முதலாவது உத்திக்கு மாறுவதாக தான் அழைப்பேன் எனக் கூறியுள்ளார்.
இதுதவிர, யேமனில் வெற்றிடமொன்று ஏற்படுமென தாங்கள் கவலைப்படவிலொலை எனத் தெரிவித்த குறித்த அதிகாரி, ஏனெனில் தாங்கள் மொத்தமாக 90,000 யேமனியப் படைகளை பயிற்றுவித்துள்ளதாகவும், யேமனில் தங்களது பிரதானவொரு வெற்றி இதுவெனக் கூறியுள்ளார்.
இந்நிலையில், ஓராண்டுக்கும் மேலாக படைகளின் நகர்வுகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவித்த குறித்த அதிகாரி, சவூதி அரேபியாவுக்கான ஐக்கிய அரபு அமீரகத்தின் தொடர்ச்சியான ஆதரவை வெளிப்படுத்தியிருந்தார்.
இதேவேளை, முக்கியமான துறைமுகமான ஹொடெய்டாவுக்கு 130 கிலோ மீற்றர் தெற்காகவுள்ள கொஹஹாவில் அமைந்துள்ள இராணுவத் தளத்திலிருந்து ஐக்கிய அரபு அமீரக படைவீரர்கள் முற்றாக வெளியேறியுள்ளதாக பெயரிடப்படாத யேமனிய இராணுவ அதிகாரியொருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
17 minute ago
29 minute ago
40 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
29 minute ago
40 minute ago
1 hours ago