Editorial / 2020 ஜனவரி 19 , பி.ப. 07:10 - 0 - {{hitsCtrl.values.hits}}

தென் யேமனில் உள்ள இராணுவப் பயிற்சி முகாம் ஒன்றை ஈரானின் ஆதரவு பெற்ற ஹூதிப் போராளிகள் நேற்று தாக்கி 60 இராணுவப் படைவீரர்களைக் கொன்றதாகவும், டசின் கணக்கானோரைக் காயமடையச் செய்ததாகவும் சவுதி அரேபிய அரச தொலைக்காட்சியான அல் எக்பரியா தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
மரிப் நகரத்தில் இடம்பெற்ற இத்தாக்குதலானது ஏவுகணைகள், ட்ரோன்கள் கொண்டு நடத்தப்பட்டதாக தகவல் மூலங்கள் தெரிவித்ததாக அவற்றை மேற்கோள்காட்டி அல் எக்பரியா தொலைக்காட்சி கூறியுள்ளது.
முகாம் பள்ளிவாசலில் மாலைத் தொழுகைகளை படைவீரர்கள் மேற்கொண்டிருந்தபோதே தாக்குதல் இடம்பெற்றதாக சவுதி அரேபியத் தொலைக்காட்சியான அல் அரேபியா தெரிவித்துள்ளது.
யேமனியத் தலைநகர் சனாவுக்கு கிழக்காக ஹூதி இலக்குகள் மீது சவுதி அரேபியாவால் ஆதரவளிக்கப்படும் படைகளின் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் தொடர் தாக்குதல்களைத் தொடர்ந்தே மேற்குறித்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இத்தாக்குதல்களில், இரண்டு தரப்புகளிலும் குறைந்தது 22 பேர் கொல்லப்பட்டதாகதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
சனாவில், குறிப்பாக சனாவுக்கு அருகிலுள்ள பகுதிகளில் வன்முறை அதிகரித்துள்ளதுடன், சனாவை நோக்கி முன்னேற யேமனிய அரசாங்கப் படைகள் முன்னேற முயல்வதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், சனாவை மீளக் கைப்பற்றுவதற்கான பிரதான நடவடிக்கையொன்றைத் தாம் முறியடித்ததாக ஹூதிப் பேச்சாளரொருவர் கடந்த வெள்ளிக்கிழமை கூறியிருந்தார்.
18 minute ago
43 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
43 minute ago
49 minute ago